Ticker

6/recent/ticker-posts

பெண்ணைக் கொலை செய்துவிட்டு கொலையாளியும் தற்கொலை

 


வெல்லவ, நிக்கதலுபொத்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்த பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அதே வீட்டில் மற்றொரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 49 வயதுடைய பெண் மற்றும் 40 வயதுடைய ஆண் எனவும், அவர்கள் நிக்கதலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நபர் பெண்ணைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும், பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments