ஹட்டன் - டிக்கோயா நகரில் தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள வியாபார நிலையமொன்றில், தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் உயிரிழந்திருப்பதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த ஹட்டன் பொலிஸார், மேற்கொண்ட விசாரணைகளில் 82,78 வயது மதிக்கத்தக்க இருவர் வெட்டு காயங்களுடன் கிடந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும், அவர்களது பிள்ளைகள் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் எடுத்த நிலையில் நீண்ட நேரம் குறித்த இருவரும் பதிலளிக்காத நிலையில், அயலவர்களின் உதவியுடன் தமது வீட்டில் சென்று பார்க்கும் படி கோரியுள்ளனர்.
இதன் பின்னரே குறித்த தம்பதியினர் காயங்களுடன் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments