![]() |
| சித்திரிக்ப்பட்டவை Ai |
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளின் தாயான ராணி தேவி, 52 வயதுடையவர்.
சாதாரண குடும்பப் பெண்ணான அவர், காலத்தின் மாற்றத்தோடு சமூக வலைதள உலகிற்குள் நுழைந்தார்.
இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய ராணி தேவி, பல்வேறு ஃபில்டர்களைப் பயன்படுத்தி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடத் தொடங்கினார்.
வயதானவர்களை இளமையாகக் காட்டும் ஃபில்டர்களின் மாயையில், ராணி தேவியின் 52 வயது கேமரா கண்களில் மறைந்துவிட்டது.
அவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினார்.
அதே நேரத்தில், இன்ஸ்டாகிராமில் இருந்த 25 வயதான அருண் என்ற இளைஞர், ராணி தேவியின் இந்த ஃபில்டர் செய்யப்பட்ட புகைப்படங்களையும் ரீல்களையும் பார்த்து அவர்மீது காதல் கொண்டார்.
ராணி தேவியின் உண்மையான வயது அவருக்குத் தெரியவில்லை.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் தொலைபேசி வழியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இறுதியில், நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.
ஒரு உணவகத்தில்தான் அவர்களின் முதல் சந்திப்பு நடைபெற்றது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தனது காதலியை காத்திருந்த அருணுக்கு, முன் வந்தது 52 வயதுடைய ஒரு பெண்.
தான் ஏமாற்றப்பட்டதாக அருண் உணர்ந்தார். அவரது கனவுகள் சிதறிப் போயின.
காதல் முறிந்த பிறகு, அருண் ராணி தேவியை மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
மிரட்டி, ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
மறுபுறம், ராணி தேவி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அருணுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இறுதியில், பொறுமை இழந்த அருண் ஒரு நாள் அவரை சந்திக்க அழைத்தார்.
ஆளில்லாத ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தபோது, ராணி தேவி அணிந்திருந்த துப்பட்டாவைப் பயன்படுத்தி அவரை மூச்சுத்திணறச் செய்து கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் அவரது மொபைல் போனையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
சில நாட்களுக்குப் பிறகு, வழிப்போக்கர்கள் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடலைக் கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், பத்து நாட்களுக்கு முன்பு ஃபரூகாபாத் காவல் நிலையத்தில் ராணி தேவி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உறவினர்கள் உடலை அடையாளம் கண்டனர்.
அவரது செல்போன் காணாமல் போயிருந்ததால், காவல்துறையினர் அழைப்பு விவரப் பதிவுகளை (CDR) ஆய்வு செய்தனர்.
அதில், தனது இறுதி நாட்களில் ராணி தேவி அதிகமாக பேசிய நபர் அருண் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அருணைத் தேடி தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இறுதியில், சம்பவம் நடைபெற்ற அதே பகுதியில் அவரை கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராம் ஃபில்டர்கள் உருவாக்கிய ஒரு மாயையான காதல், இறுதியில் இவ்வாறு ஒரு சோகமான குற்றச் சம்பவமாக முடிவடைந்தது.

0 Comments