Ticker

6/recent/ticker-posts

🚨 “என் குழந்தையை கண்டுபிடித்து தாருங்கள்…” ஊடகங்களின் முன் கதறி அழுத தந்தை… ஆனால் இறுதியில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை நாடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது! 😢💔


டெல்லியின் பஹல்ஸ்வா டெய்ரி பகுதியில் வசித்து வந்த இந்த நபர், மே 24 காலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது தனது மனைவியும் மூத்த மகளும் மயக்க நிலையில் இருந்ததாகவும், 10 மாத பெண் குழந்தை காணாமல் போயிருந்ததாகவும் போலீசில் புகார் அளித்தார்.

அதோடு, குழந்தையின் பால் பாட்டில் வீட்டின் வெளியே கிடந்ததாகவும் கூறினார்.

சம்பவம் பரவியதும் ஊடகங்கள் வீட்டு முன் திரண்டன. அப்போது,

“என் குழந்தையை யாராவது கண்டுபிடித்து தாருங்கள்…” என்று அவர் கதறி அழுத காட்சிகள் பலரையும் உருக்கியது. 😔

ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணை அனைத்தையும் தலைகீழாக மாற்றியது.

🔎 சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், வீட்டின் அருகிலிருந்த செப்டிக் டேங்க் பகுதியிலும் தேடுதல் நடத்தப்பட்டது.

அப்போது காணாமல் போன 10 மாத குழந்தையின் சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டது. 💔

அதிர்ச்சியின் உச்சம் என்னவென்றால்…

அந்த உடலை அங்கே மறைத்து வைத்தது வேறு யாருமல்ல — குழந்தையின் சொந்த தந்தைதான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில்,

“இரண்டாவது முறையும் பெண் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட கோபமும் விரக்தியும் தான் இந்த கொடூர செயலை செய்ய வைத்தது…”

என்று அவர் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 😢

👶 ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பது அவளின் தவறல்ல…

ஆனால் இன்னும் பெண் குழந்தைகளை சுமையாக பார்க்கும் மனநிலை, இந்த சமூகத்தின் மிகப்பெரிய சாபமாகவே உள்ளது.

பெண் குழந்தை என்பது பாரம் அல்ல…

ஒரு குடும்பத்தின் ஆசீர்வாதம். ❤️


இப்படிப்பட்ட மனநிலைகள் மாறாத வரை, கல்வியும் முன்னேற்றமும் முழுமையடையாது.


🌸 🌸 நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்:

“யாருக்கு பெண் குழந்தைகள் வழங்கப்பட்டு, அவர் அவர்களை அவமதிக்காமல், அவர்களுக்கு நன்மையாக நடந்துகொண்டு, நல்ல முறையில் வளர்த்தாரோ, அவருக்கு ஜன்னத் உண்டு.”

📚 — Sunan Ibn Majah, ஹதீஸ் எண்: 3669

🌸 மேலும் நபி ﷺ கூறினார்கள்:

“இரண்டு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயதை அடையும் வரை நல்ல முறையில் பராமரிப்பவர், மறுமை நாளில் என்னுடன் இவ்வாறு இருப்பார்.”

என்று தமது விரல்களை இணைத்து காட்டினார்கள். 🤍

📚 — Sahih Muslim, ஹதீஸ் எண்: 2631




🌸 இன்னொரு ஹதீஸில்:

“மூன்று பெண் குழந்தைகளையோ அல்லது மூன்று சகோதரிகளையோ பராமரித்து, அவர்களிடம் நன்றாக நடந்து, அல்லாஹ்வை பயந்து வாழ்பவருக்கு ஜன்னத் உண்டு.”

📚 — Jami` at-Tirmidhi, ஹதீஸ் எண்: 1912

Post a Comment

0 Comments