காதல் அதிகரித்தபோது திருமணம் செய்து ஒன்றாக வாழ வேண்டும் என்று கூறிய 52 வயது பெண்; கொலை செய்து தப்பியோடிய 21 வயது காதலன்
சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வரும் இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தலைமுறையின் வாழ்க்கை முறையும் சிந்தனைகளும் எங்கே செல்கிறது என்ற கேள்வியை எழுப்பும் வகையிலான சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் சிவகங்கை பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், 52 வயதான சரஸ்வதி மற்றும் 21 வயதான சரவணகுமார் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. வேலை வாயிலாக ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியிருந்தது.
காதல் தீவிரமான நிலையில், தன்னை திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ வேண்டும் என்று சரஸ்வதி கேட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சரவணகுமார் அவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சரஸ்வதியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சரவணகுமாரை, ஒரு மாதத்திற்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

0 Comments