Ticker

6/recent/ticker-posts

Photo :பெற்றோர் கண் முன்னே கடலலையில் அள்ளுண்டு சென்ற 3 பிள்ளைகள் உயிரிழப்பு அம்பாந்தோட்டையில் சம்பவம்.!!



பெற்றோர் கண் முன்னே கடலலையில் அள்ளுண்டு சென்ற 3 பிள்ளைகள் உயிரிழப்பு  அம்பாந்தோட்டையில் சம்பவம்.!!


அம்பாந்தோட்டை ஹூங்கம கடற்கரையில் நடந்த கோர விபத்து – சோகத்தில் மூழ்கிய குடும்பம்.


வார இறுதி விடுமுறையைக் கழிக்க பெற்றோருடன் மகிழ்ச்சியாக கடற்கரைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்குக் காத்திருந்த விபரீதம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

ஹூங்கம, கலாமெட்டிய (Kalametiya) கடற்பகுதியில் நேற்று மாலை பெற்றோருடன் நீராடிக் கொண்டிருந்தபோது, திடீரென எழும்பிய ராட்சத அலையொன்று மூன்று சிறுவர்களை நொடிப் பொழுதில் கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது! 


என்ன நடந்தது? கொடூர பின்னணி..

ஒரே குடும்பத்துச் சோகம் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் 12 மற்றும் 18 வயதுடைய அண்ணன், தம்பி இருவர் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 


 தொடரும் தேடுதல் வேட்டை... இவர்களுடன் சென்ற இவர்களது உறவினரான 17 வயதுடைய மற்றுமொரு சிறுவன் இன்னும் மீட்கப்படவில்லை. அவரைத் தேடும் பணிகள் தற்போதும் தீவிரமாக நடந்து வருகின்றன! 


 உயிர்காப்புப் பிரிவு களம் - தங்காலை பொலிஸ் உயிர் காக்கும் பிரிவு, இலங்கை கடற்படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து ஹெலிகாப்டர்கள் மற்றும அதிவேகப் படகுகள் மூலம் கடலில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


 கடற்படை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, கடலில் நீராடச் செல்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு கடற்படையினரும் பொலிஸாரும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்!







Post a Comment

0 Comments