Ticker

6/recent/ticker-posts

சம்மாந்துறையில் மோட்டார் சைக்கில் ரேஸ் ஓடும் சிறுவர்களால் பொதுமக்கள் அச்சம்


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சம்மாந்துறை குவாஷி நீதிமன்றம் முன்னால் மீண்டும் ஒரு விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளது.


இந்த மாத காலத்திற்குள் அதே இடத்தில் இடம்பெற்ற இரண்டாவது விபத்தாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைகவசம் இல்லாமல் அதி வேகத்தில் வீதியை பயன்படுத்தும் சில சிறுவர்களால் அந்த வீதியில் தொடர்தேர்ச்சியாக இவ்வாறான வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்த விபத்தானது வேகமாக மோட்டார் சைக்கிலை செலுத்தி எதிரில் சென்ற மோட்டார் சைக்கிலில் சென்ற நபரில் மோதியதால் விபத்து நேர்ந்துள்ளது. உயிர்சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனினும் காயங்களுக்குள்ளாகி சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரனையை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-ஷாதிர் ஏ ஜப்பார்

Post a Comment

0 Comments