Ticker

6/recent/ticker-posts

மன்னார் விபத்தில் ஒருவர் பலி; 10 பேர் காயம்


ரொசேரியன் லெம்பட்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் புதன்கிழமை22) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 29 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பத்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, 35ஆவது கிலோ மீற்றர் மற்றும் 36ஆவது கிலோ மீற்றர் மைல்கல்களுக்கு இடையில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ஆசிகுளம், முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேருந்தில் பயணித்த எட்டு ஆண்களும் இரண்டு பெண்களும் காயமடைந்து மன்னார் மற்றும் வவுனியா மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments