Ticker

6/recent/ticker-posts

video விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்,இரு அமைச்சர்கள் உட்பட 8 பேர் பரிதாப பலி!



விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர், இரு அமைச்சர்கள் உட்பட 8 பேர் பரிதாப பலி!

மேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் நேற்று (06) ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா முஹம்மது உட்பட 8 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.





கானாவின் தலைநகர் அக்ராவிலிருந்து அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள வனப்பகுதியில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments