Ticker

6/recent/ticker-posts

பணக்கார திமிர் பிடித்தவன்களினால், மிஹிர் அஹ்மத்திற்கு நிகழ்ந்த கொடூரம்


மிஹிர் அஹ்மத்.. வயது 15. இந்தியா எர்ணாகுளம் மாவட்டத்தில் திருவாணியூர் எனுமிடத்திலுள்ள பிரபலமான தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தவர்.

அதிகமான கட்டணம் வசூலிக்கும் பள்ளிக்கூடம் என்பதால் வசதியுள்ள குடும்பத்தின் வாரிசுகள் மட்டுமே அங்கு அட்மிஷன் வாங்க முடியும்..

தங்களின் பிள்ளை மிஹிர் அஹ்மத் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறந்த கல்வி கொடுக்க வேண்டும் என்று விரும்பிய வயநாடு சேர்ந்த பெற்றோர் விடுதியில் சேர்க்காமல் திருப்புணித்துறை அருகில் வீடு வாடகைக்கு எடுத்து மகனுக்காக வசிப்பிடத்தை மாற்றியவர்கள்...

வசதியான குடும்பத்தின் பிள்ளைகள் படிக்கும் பப்ளிக் ஸ்கூல் என்பதால் அங்கு ஊதாரியான ரவுடித்தனம் மிக்க சில மாணவர்களும் படித்து வந்தனர்..

அவர்களால் சக மாணவர்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகி வந்ததும் பள்ளிக்கூட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் நிர்வாகம் அவர்களை அழைத்து முறைப்படி கண்டிக்காமல் விட்டதால் அவர்களின் ராகிங் கொடுமை தொடர்ந்தது..

கடந்த வாரம் ஒருநாள் அவர்களின் கொடூர சீண்டலுக்கு மிஹிர் அஹ்மத் கண்ணில்பட, கழிவறைக்கு அழைத்து சென்று ராகிங் செய்ய, 9ம் வகுப்பு மாணவரான மிஹிர் அஹ்மத் எதிர்ப்பு தெரிவித்த போது அவரின் தலையை கழிவறை குளோசட்டில் அமிழ்த்தி பிடித்து தண்ணீர் ஃப்ளஷ் செய்து மிகவும் அருவருப்பான ராகிங் செயலை செய்துள்ளனர் அந்த பணக்கார வீட்டின் தறுதலை மாணவர்கள்...


பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்த மிஹிர் அஹ்மத் கழிவறை குளோசட் ராகிங் கொடுமை குறித்து தாயிடம் கூறி கதறியழுதுள்ளார்...

மகனின் எதிர்காலம் குறித்து பலவித கனவுகளை சுமந்து மகனுக்காக வசிப்பிடத்தை மாற்றிய தாய் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்...

ஆனாலும் மன அழுத்தம் அதிகரித்து தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பின் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டது ஒட்டுமொத்த கேரள மாநிலத்தின் பேசு பொருளானது...

மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கை கல்வியும் வழங்குவது காலத்தின் கட்டாயம்..

பள்ளிக்கூடம் சென்று வீட்டுக்கு திரும்பும் பிள்ளைகளின் முகத்தை பார்த்து அவர்கள் உள்ளத்தின் கவலைகள் உணரும் உளவியல் பெற்றோருக்கும் புரியவேண்டும்..

கல்வி நிலைய வளாகங்கள், பொது இடங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவையான துணிச்சலை, தைரியத்தை ஒவ்வொரு பிள்ளைக்கும் பெற்றோர் அவ்வப்போது எடுத்துக் கூறவேண்டும் .

தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொள்வது எதற்கும் தீர்வாகாது என்பதையும் கற்பிப்பது சாலச்சிறந்தது...

Colachel Azheem

Post a Comment

0 Comments