நாமக்கல் அருகே குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
மகனை காப்பாற்ற குடிநீர் தொட்டியில் 11 மாத குழந்தையுடன் இறங்கிய தாய் : 3 பேரும் பலி
நாமக்கல்,
நாமக்கல் அருகே குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் பரமத்தி சாலையில் போருபத்தி பகுதியில் வசித்து வருபவர் ரவிகுமார் . இவர் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி இந்துமதி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் 3 வயது மகன் யாத்விக் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறுதலாக திறந்து வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். அவரை காபாற்ற அவரது தாய் தனது 11 மாத குழந்தையான நிவின் யாத்விக்குடன் 10 அடி ஆழமான தொட்டியில் இறங்கிய நிலையில் 3 பேரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
0 Comments