கேரள: மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம் சுபைதா என்பவர் தனது மகன் ஆஷிக் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார் இதைத் தொடர்ந்து எச்சரித்து வரும் தனது தாயை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தார் மகன் ஆஷிக்.
போதையால் ஒரு மனிதன் எதை வேணாலும் செய்து விடலாம் என்பதற்கு ஒரு உதாரணம்
பெற்றெடுத்த தாய் தனது மகனை எப்படி பார்த்துக் கொண்டிருப்பார் தனது மகனுக்கு ஒரு சிறிய காயம் ஏற்பட்டாலும் தனக்கு ஏற்பட்டது போல் துடிப்பாள் அந்த தாய் கொலை செய்வதற்கு எப்படி மனம் வந்தது அந்த மகனுக்கு...
அந்த மகன் வயதும் கூட சிறிய வயதாக தான் தெரிகிறது 15 இருந்து 18 வயதுக்குள் இருக்கிறது அந்த மகன் போதை பழக்கத்திற்கு அடிமையாக தன்னுடைய தாயே கொலை செய்யும் அளவிற்கு அவனுக்கு போதை ஏறி உள்ளது..
தாயைக் கொன்ற அந்த மகனிடத்தில் இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஏன் கொன்றாய் என்று கேட்டால் அவன் சொல்லும் பதில் நான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை போதையில் என்னுடைய தாயைக் கொன்று விட்டேன் என்று கதறி அழுவான்...
ஒரு போதை பழக்கம் ஒரு மனிதனை எங்கே கொண்டு சொல்கிறது...
இந்த போதை பழக்கத்தை முழுமையாக இஸ்லாம் வேரோடு எதிர்க்கிறது...
போதைக்கு எதிராக பெற்றோர்கள் மிகத் தெளிவாக தங்களது பிள்ளைகளை வளர்க்க வேண்டும் இன்றைய சமூகம் போதையோடு கலந்து கொண்டிருக்கிறது அதை வேரோடு அளிக்க அனைவரும் போராடுவோம்...
தினந்தோறும் போதைக்கு அடிமையாகி சின்னஞ்சிறு பிள்ளைகள் இன்னும் ஏராளமான சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்
தெரிந்தது ஒரு சில செய்திகள் தெரியாது பல்லாயிரம் செய்திகள்
அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக...
நம்முடைய ஆண் பெண் இரு பிள்ளைகளையும் மிக தெளிவாக இஸ்லாம் வகுத்துத் தந்த அடிப்படையில் இந்த உலகத்தில் வார்த்து எடுக்க வேண்டும்
இல்லையென்றால் நம்முடைய பிள்ளைகளும் இது போன்று நிலைமைக்கு ஆளாக உள்ளார்கள்
இந்த செய்தியை கேட்கும் போது மன வேதனையும் ஒரு முஸ்லிம் இப்படி செய்து விட்டானோ என்ற அதிர்ச்சியும் எழுந்துள்ளது...
முஸ்லிம் சமூகம் இந்த உலகத்திற்கு ஒரு முன்மாதிரியான சமூகம் எவ்வாறு நடக்க வேண்டும் ஆனால் தற்போது தலைகீழாக மாறி போதை பழக்கத்திற்கு அடிமையாய் சீரழிந்து கொண்டிருக்கிறது..
இஸ்லாம் சொன்ன அடிப்படையில் இந்த உலகத்தில் நம்முடைய பெற்றெடுத்த பிள்ளைகளை வளர்க்க வேண்டும் அதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்...
இக்காலகட்டத்தில் பெற்றோர்கள் மிக தெளிவாக பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும்....
பதிவு : மு.ஆஷிக் அகமது
0 Comments