Ticker

6/recent/ticker-posts

அரசினால் வழங்கப்பட்ட கெப் வாகனத்தை புல் ஏற்றுவதற்குப் பயன்படுத்திய ஆளுந்தரப்பு எம்பி!

 


அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும்  கெப் ரக வாகனத்தில் புல் ஏற்றிச் செல்லும் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அவர் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும்  தெரிகிறது.

இந்த புல் கால்நடைகளுக்காக ஒரு பண்ணைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும்  கூறப்படுகிறது.

எம்.பி.க்களுக்கு அரசு வாகன உரிமம் வழங்குவதில்லை, அதற்கு பதிலாக அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் வாகனத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.

இது இதுவரை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், ஆளும் கட்சியின் பல எம்.பி.க்கள் வாகன விவகாரத்தில் ஏதோ ஒரு வகையில் விலக்கு பெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

Post a Comment

0 Comments