Ticker

6/recent/ticker-posts

காஸா மக்களை கொல்ல வெடிகுண்டில் கையெழுத்து போட்ட கேப்டன் அமெரிக்கா ஹீரோ.. இப்போ என்ன ஆச்சுனு பாருங்க

 


நியூயார்க்: மேற்கு அமெரிக்காவில் காட்டு தீ தீவிரமாக பரவி வருகிறது. இதில் பல ஹாலிவுட் ஹீரோக்களின் வீடும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் கிறிஸ் எவன்ஸும் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 'கேப்டன் அமெரிக்கா' திரைப்படத்தின் ஹீரோவான அவர், காசா மக்களுக்கு எதிராக வெடிகுண்டில் கையெழுத்து போடப்பட்டதற்காக பிரபலமாக பேசப்பட்டிருந்தார். வெடிகுண்டில் கையெழுத்து போட்டது விவாதமான நிலையில், நான் கையெழுத்து போட்டது வெடிகுண்டே கிடையாது என்று கூறி விளக்கமளித்திருந்தார். தற்போது கிறிஸ் எவன்ஸின் வீடும் காட்டு தீயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.


உண்மை என்ன?: 
கடந்த 2011ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஹாலிவுட் திரைப்படம்தான் கேப்டன் அமெரிக்கா. அந்த நேரத்தில் வேறு எந்த தமிழ் படங்களும் பெரிய ஹிட் கொடுக்காததால், இயல்பாகவே கேப்டன் அமெரிக்காவுக்கு கூட்டம் குவிந்தது. ஆனால் படம் செம மொக்கை. இந்த படத்தில் ஹீரோவாக நடத்திருந்த 'கிறிஸ் எவன்ஸ்' படத்துக்காக பேசப்பட்டதை விட, வேறு ஒரு விஷயத்திற்காக பெரியதாக பேசப்பட்டிருந்தார். அதாவது அவரும் மற்ற நடிகர்களும் அமெரிக்க ராணுவ முகாமுக்கு சென்றிருந்தபோது, அங்கு பீரங்கி குண்டு ஒன்றில் இவர் கையெழுத்திட்டிருந்தார். பாலஸ்தீனத்திற்கு எதிராக அமெரிக்க இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்து வந்த நேரம் அது. அப்போது பிரபலங்கள் சிலர் வெடி குண்டுகளில் கையெழுத்து போட்டு அனுப்பி வைத்திருந்தனர். உண்மையாகவே கிறிஸ், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகதான் குண்டு மீது கையெழுத்து போட்டாரா என்று தெரியாது. ஆனால், அவர் இந்த நோக்கத்திற்காகத்தான் கையெழுத்து போட்டார் என்று செய்திகள் வேகமாக பரவின.

கிறிஸ் எவன்ஸின் மறுப்பு: 
இப்படியே பேச்சுகள் வளர்ந்தால், தன் ஹாலிவுட் கெரியரையே மொத்தமாக காலி செய்துவிடும் என்று பயந்த கிறிஸ், இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தார். கடந்த 2016ம் ஆண்டு தானும், தன்னுடைய பரிவட்டங்களும் ராணுவ முகாமுக்கு சென்றிருந்ததாகவும், அங்கு ராணுவ வீரர்கள் கையெழுத்து கேட்டதால் போட்டு கொடுத்ததாகவும், நான் கையெழுத்து போட்ட பொருள் வெடிகுண்டே இல்லை என்றும் கூறியிருந்தார்.

அந்த போட்டோவை.. 
பத்தாவது படிக்கிற பையன் பார்த்தா கூட, அது வெடிகுண்டுதான் என்று சரியாக சொல்லிவிடுவான். ஆனால், அது இல்லவே இல்லை என்று கிறிஸ் கூறியிருந்தது மேலும் அவர் மீது விமர்சனங்களை தீவிரப்படுத்தியிருந்தது. காட்டு தீயில் பாதிப்பு: இந்த கதை ஒரு பக்கம் இருக்கையில், மறுபுறம் மேற்கு அமெரிக்காவில் பரவி வரும் காட்டு தீ, பல ஹாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகளை எரித்து சாம்பலாக்கியிருக்கிறது. இதில் கிறிஸ் எவன்ஸின் வீடும் எரிந்துள்ளதாக சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் பலரும், கிறிஸ் எவன்ஸ் வீடு கொழுந்துவிட்டு எரிகிறது, அன்னைக்கு அப்படி பண்ணல்ல.. அதனாலதான் இன்னைக்கு உன் வீடு எரிகிறது என்று கூறி சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸையும், பாதி கலிஃபோர்னியாவையும் காட்டு தீ அழித்திருக்கிறது. இதுவரை அமெரிக்கா ரூ.12.9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்திருக்கிறது. இந்த தொகையானது, இந்தியாவில் பிரதமரின் இலவச வீடு வழங்கும் திட்டத்திற்கு கடந்த 2024-2025ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments