Ticker

6/recent/ticker-posts

இசைக் கச்சேரியை ரசித்தோம்.. நாம் ரசனை உள்ள மக்கள்..- டில்வின்


அண்மையில் கல்கிஸ்ஸ ஹோட்டலில் இடம்பெற்ற இசை இரவு நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு, டெய்லி மிரர் நாளிதழுடனான கலந்துரையாடலில், இன்பத்தை அனுபவிக்கும் ஒரு நபராக இந்த சந்தர்ப்பத்தை அனுபவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா கருத்து தெரிவித்திருந்தார்.

“.. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரதமர் ஹரினி அமரசூரிய, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நான் மற்றும் பலரும் அழைக்கப்பட்டோம். கட்சியின் மற்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டனர். அலுவலகத்திற்கு வந்து அழைப்பிதழ் கொடுத்தனர்.

ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு அமைப்பிடம் இருந்து அழைப்பு வந்தால் அதில் கலந்து கொள்கிறோம். திருமண விழாவிற்கு அழைப்பிதழ் வந்தால் நீங்களும் தான் அதில் கலந்து கொள்கின்றீர்கள்.

அங்கே எங்களுக்கு ஒரு மேசை ஒதுக்கப்பட்டிருந்தது. டிக்கெட் 50,000 ரூபாய் என்பது உண்மைதான். ஆனால் ரூ.30,000, ரூ.15,000 மற்றும் ரூ.7,500 விலையில் டிக்கெட்டுகள் இருந்தன.

அதில் நாங்கள் கலந்து கொண்டோம். அதை நாங்கள் ரசித்தோம். நாங்கள் ரசனையுள்ள மக்கள்..” எனத் தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments