2024 ஜனாதிபதி தேர்தல்


2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.


மேலும், வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியாற்றுவார்கள் என நம்புகிறோம்.


இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பொது அமைதியை பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டில் உச்சபட்ச அமைதியான சூழலைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவினரைக் கேட்டுக்கொள்வதுடன், நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.


தேசிய மக்கள் சக்தி




21-09-2024