தற்பொழுது நாட்டு மக்களுக்கு தெளிவான தீர்மானம் ஒன்று இருக்கும். ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஜோடிக்கு புள்ளடி இடுவதா அல்லது இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதா என்று தீர்மானிக்க வேண்டும். இந்த பிரிவினை கோட்டை அடையாளம் கண்டு செயல்படுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 44 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (10) குளியாபிட்டிய நகரில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாடு அதல பாதாளத்தில் விழுந்து, மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படாத ஒரு யுகத்தில் இருக்கின்றோம். குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் மந்த போசனை அதிகரிக்கின்ற இந்த யுகத்தில் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, விருத்தியடையச் செய்வதற்கான யுகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த இளைஞர் சமூகத்திற்காக ஒரு மில்லியன் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதோடு, வறுமையை போக்குகின்ற நோக்கில் மாதம் ஒன்றுக்கு 20,000 ரூபா விதம் 24 மாதங்களுக்கான நிவாரணத்தை வழங்குவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
0 Comments