பொதுஜன பெரமுன சார்பில் தமக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை தாம் நினைத்தளவுக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள அரசியல் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியியை பிரதிநிதித்துவம் செய்த அமைச்சர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் பெருமளவில் ஆதரவளித்தனர். எனினும் மக்களால் அதிகளவான வாக்குகள் எனக்கு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது, அதனை சரி செய்த ஸ்திரமான நிலையை நோக்கி பயணித்த போதும், தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக ரணில் கவலை தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான மக்கள் அனுர திஸாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்ததாக பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.
0 Comments