துயகோந்தா 1988 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இலங்கை விமானப்படையில் 19 ஆவது உள்வாங்கலுக்கு அதிகாரி கேடட்டாக இணைந்து கொண்டதுடன், அவரது நீண்ட பதவிக் காலத்தில், வடக்கு மற்றும் கிழக்கை விடுவிப்பதற்கான மனிதாபிமானப் போரை உள்ளடக்கிய அனைத்து முக்கிய நடவடிக்கைகளிலும் அவர் தீவிரமாக பங்கேற்றார், மேலும் அவர் இலங்கை விமானப்படையின் செயல்பாடுகள் / விஐபி மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர் பைலட்டாக 7000 க்கும் மேற்பட்ட பறக்கும் மணிநேரங்களை பதிவு செய்ய முடிந்தது.
எயார் வைஸ் மார்ஷல் துயகோந்தா பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும் 2014 ஆம் ஆண்டு பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் இரண்டு வருடங்கள் பணியாற்றினார்.
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது எதிரிகளை எதிர்கொள்ளும் துணிச்சலான அவரது தனிப்பட்ட செயல்களுக்காக, அவர் "வீர விக்கிரம விபூஷணயா" (WWV), "ரண விக்கிரம பதக்கமா" (RWP) மற்றும் "ரண சூர பதக்கமா" (RSP) ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டார்.
0 Comments