சர்வதேச ஊடகங்களில் இன்று அதிகம் பகிரப்பட்ட படங்கள் இவை.

கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் இந்தோனேசியா ஜகார்த்தாவில் அமைந்துள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய இஸ்திக்லால் மசூதிக்கு வருகை தந்து பல்வேறு நாடுகளின் மதகுருவினரை சந்தித்து பேசினார்.

ஜகார்த்தா மசூதி தலைமை இமாம் நாசருதீன் ஓமரின் கரங்களை பற்றி பிடித்த போப் அவரின் கரங்களில் முத்தமிட பதிலுக்கு போப் பிரான்சிஸ் அவர்களின் நெற்றியில் இமாம் முத்தமிட்ட காட்சிகள் பரவி வருகிறது..

மதத்தின் பெயரால் நடைபெறும் சகிப்பின்மை மற்றும் வன்முறைக்கு எதிரான கூட்டறிக்கையில் இருவரும் கையெழுத்திட்டனர்..