அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கான உரிமைகள் வரைவு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.