எத்தனை தபால்மூல வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை யாராலும் கூற முடியாது என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே கூறுகிறார்.

கொழும்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குகள் பாவனை தொடர்பில் கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அவர்கள் தலைமையிலான சமூக ஊடக குழுக்களும் தபால் வாக்குகளில் தங்களுக்கு அதிக வாக்குகள் இருப்பதாக கூறுவது தேர்தல் முறைகேடுகள் எனவும் அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கப்படலாம் என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையர் குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்