நடந்து முடிந்த இலங்கையின் 9அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி அநுர திசாநாயக்க வெற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

இதேவேளை, 2வது விருப்பத் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற போதிலும் அதிக வாக்குகளைப் பெற்றவராக அநுர குமார திசாநாயக்க உள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.


இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க நாளை காலை 9 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அவருக்கு பல அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.