சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதியொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.


பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு நேற்று (04) மாலை கிடைத்த செய்திக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பலதுருவெல்ல, சேரன்கடவைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண், அந்த தங்கும் விடுதியில் ஆண் ஒருவருடன் வசித்து வந்ததுடன், கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

பெண்ணின் கொலைக்கு பிறகு அந்த நபர் தலைமறைவாகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.