இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கில் தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) அக்டோபரில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகுமென்று என்று ஜனாதிபதி அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை குற்றத்தைச் செய்கிறது என்பதை நிரூபிக்க உண்மைகளையும் ஆதாரங்களையும் வழங்க தென்னாப்பிரிக்கா உத்தேசித்துள்ளது,” என்று அது கூறியது. “நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை இந்த வழக்கு தொடரும்.



இந்த வழக்கை கைவிடுமாறு தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க இஸ்ரேலிய இராஜதந்திரிகள் அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர்களை வற்புறுத்துகிறார்கள் என்ற செய்திகளுக்கு மத்தியில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

"இந்த வழக்கு மத்திய கிழக்கில் அமைதியை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சியை பிரதிபலிக்கிறது" என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நிகரகுவா, பாலஸ்தீனம், துருக்கி, ஸ்பெயின், மெக்சிகோ, லிபியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்க வழக்கில் இணைந்துள்ளன.