30 பேரின் பெயர்ப்பட்டியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையம் சென்ற போதும், அவர்கள் குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய சுமார் 30 பேர் விபரங்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்களின் மனைவிகள், பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.


இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.