மொனராகலையில் விபத்தொன்றில் படுகாயம் அடைந்த பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி பிபில - மொனராகல வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்த இரு மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த இரண்டு மாணவர்களும் பயிற்சி வகுப்பிற்குச் சென்று மாலை ஐந்து மணியளவில் பிபில மொனராகலை வீதியில் உள்ள கடைக்கு முன்பாக வீதி ஓரத்தில் நின்ற வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

அந்தப் பகுதியால் பயணித்த கார் சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இரு மாணவர்களின் மீது கார் மோதியுள்ளது.

படுகாயமடைந்த இரு மாணவர்களும் பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த துலாஷி கெஷாலா என்ற 15 வயது மாணவி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.