இலங்கை ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து இன்று (23) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கிண்ணியா புஹாரியடி சந்தியில் கட்சி ஆதரவாளர்கள் இன்று (23) திசை காட்டி வடிவிலான கேக் கினை வெட்டி வெற்றிக் களிப்பில் ஈடுபட்டனர். இதில் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்.
ஓட்டமாவடி பிரதான வீதியில் ஒன்று கூடிய கல்குடா தொகுதி ஆதரவாளர்கள் அப்பகுதியால் பயணித்த அனைவருக்கும் யோகட் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கு ஆதரவளித்து கல்குடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு பட்டு முதல் தடவையாக அனுரகுமார திசாநாயக்காவை ஓட்டமாவடிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக அழைத்து வந்தமைக்காக தொழில் அதிபரும் அகீல் எமெர்ஜென்சி அமைப்பின் ஸ்தாபகர் எம்.ஏ.சி.நியாஸ் ஹாஜியாருக்கு நிகழ்வில் கலந்து கொண்டோர் கை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேசங்கள், கல்முனை
1 Comments
"பதவிப் பிரமானம் செய்து கொண்டான்" என்றுள்ளது, மாற்றவும்.
ReplyDelete