பாலஸ்தீனத்தை தொடர்ந்து.. லெபனானுக்கு நகர்ந்த போர்! ஹிஸ்புல்லா ஒழிப்பை நிகழ்த்துகிறதா இஸ்ரேல்?

இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல் தனது தாக்குதலை லெபனான் மீதும், ஹிஸ்புல்லாக்களின் நிலைகள் மீதும் தீவிரப்படுத்தியுள்ளது.

இது ஹிஸ்புல்லாக்களை முழுமையாக அழித்துவிடுமா? என்று கேள்விகளை எழுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்குமான பஞ்சாயத்து பல ஆண்டுகள் நீடித்து வந்தாலும், கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட சம்பவம் ஒன்று பெரும் தாக்கத்தை உருவாக்கிவிட்டது. அதாவது, காலங்காலமாக அடி வாங்கிக்கொண்டிருந்த பாலஸ்தீனம், தன்னெழுச்சியாக இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்த தொடங்கிவிட்டது. இதை செய்தது ஹமாஸ் எனும் ஆயுதம் தாங்கிய பாலஸ்தீன விடுதலைக்குழுதான். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தியது. " ஹிஸ்புல்லாவுக்கு மரண அடி..நஸ்ரல்லாவை வீழ்த்திய இஸ்ரேல்! சண்டை செய்ய தயாராகும் ஈரான்.. மிரளும் மேற்கு" இதில் இப்போது வரை 41 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

பலியானோர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் 50%க்கும் அதிகம். இருப்பினும் ஹமஸை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. ஓராண்டு போர்.. ஏராளமான ஆயுதங்கள், ஏராளமான பலி எண்ணிக்கை இருந்தும் ஏன் ஹமாஸை அழிக்க முடியவில்லை என்று பரவலாக கேள்வி எழுந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளே, ஹமாஸின் முழுமையான ஒழிப்பு என்பது சாத்தியமில்லை என ஒப்புக்கொண்டனர். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாமல் தற்போது லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்திருக்கிறது. லெபனான், இஸ்ரேலுடன் வடக்கு எல்லையை பகிர்ந்துக்கொண்டிருக்கிறது. லெபனானிலிருந்து இயங்கி வரும் பாலஸ்தீன விடுதலை ஆதரவு இயக்கமான ஹிஸ்புல்லா, ஹமாஸுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் கடந்த ஓராண்டாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது. 2 எனவே இதற்கு பழிவாங்க லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.

மட்டுமல்லாது, ஹிஸ்புல்லாவை ஒரேயடியாக அழிப்பதாகவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஹமாஸை அழிப்பதாக சொல்லி, அதை முழுமையாக செய்ய முடியாமல் உள்ள இஸ்ரேல், ஹிஸ்புல்லாவை எப்படி அழிக்கும்? என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். "ஹிஸ்புல்லா தலைமையகத்தில் இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. மெயின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா படுகொலை? பகீர்" மட்டுமல்லாது ஹிஸ்புல்லா அமைப்பு, ஹமாஸை விட பலமடங்கு சக்தி வாய்ந்தது. இந்த அமைப்பின் தலைவர், இரண்டாம் கட்ட தளபதிகள் என பலரையும் கடந்த இரண்டு மூன்று நாட்களில் இஸ்ரேல் தீர்த்துக்கட்டியது உண்மைதான். ஆனால், இந்த அமைப்பால் தலைமை இல்லாமல் இயங்க முடியும். ஏனெனில், ஹிஸ்புல்லா என்பது ஒரு சித்தாந்தம். இந்த அமைப்புதான் லெபனானுக்கு விடுதலை வாங்கி கொடுத்து. இஸ்ரேலிடம் இருப்பதை விட அதிநவீன ஆயுதங்களை ஹிஸ்புல்லா தன்வசம் வைத்திருக்கிறது. இந்த ஆயுதங்கள் பூமிக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே இதை கண்டுபிடிப்பது என்பது அவ்ளவு எளிதான காரியம் அல்ல. தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், இந்த ஆயுதங்களை ஹிஸ்புல்லா உடனே வெளியே எடுக்க முடியாது.

ஆனால், அதை வெளியில் எடுக்கும்பட்சத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் மிக கடுமையானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே ஹிஸ்புல்லா ஒழிப்பு என்பது முழுமையாக சாத்தியமாகிவிடாது என்றும், இந்த போர் காரணமாக கொல்லப்படுவது என்னவோ அப்பாவி மக்கள்தான் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.