சிலர் பார் போமிட்டுக்களை பெற்று கோடிக்கு விற்று சஜித்தை தோற்கடிக்க ரணிலுக்கு உதவுகின்றனர் என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (15) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் நிற்பவரை பாருங்கள். அனைத்து கள்ளர்களும், திருடர்களும் கொள்ளையடித்தவர்களும் ஒன்றாக நிக்கின்றார்கள்.
கொள்ளையடித்தவர்களை பாதுகாக்கவும், அவர்களது களவுகளை மறைக்கவும் ரணில் முயற்சிக்கின்றார். அவரை சுற்றியுள்ளவர்களை பார்த்தால் தெரியும். அவர்களது களவுகளை மறைப்பதற்கும், அவர்களை பாதுகாப்பதற்கும் சஜித்தை தோற்கடிக்க சதி செய்கின்றனர்.
சஜித் வந்தால் கொள்ளையடித்தவற்றை பறிமுதல் செய்துவிடுவார் என்று பயப்படுகின்றனர். அதனால்தான் சஜித்தை தோற்கடிக்க வேண்டும் என்று கூறி அனைத்து திருடர்களும் ஒன்றாக நிக்கின்றார்கள்.
சஜித் முதல் இடத்திலும், அனுர இரண்டாமிடத்திலும் இருக்கின்றார்கள். மூன்றாம் இடத்தில்தான் ரணில் இருக்கின்றார். சஜித்துக்கும், அனுரவுக்கும்தான் போட்டி இருக்கின்றது. ரணிலுடன் போட்டி இல்லை.
நாமலுக்கும், ரணிக்கும் 3 ஆவது, 4 ஆவது இடத்திற்கு யார் வருவது என்று போட்டி நிலவுகிறது. இன்று அரியநேந்திரனுக்கு வாக்கு கேட்டுக்கொண்டு திரிகின்றார்கள். ரணில் அவரையும் களத்தில் இறக்கியுள்ளார்.
6 தடவை பிரதமராகவும், 1 தடவை ஜனாதிபதியாகவும் இருந்த ரணிலால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரணில் அனுர, அரியநேந்திரன் அனைவரும் இணைந்து சஜித்தை தோற்கடிக்க சதி செய்கின்றார்கள்.
இந்த நிலையில் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் உண்மையில் நல்ல நோக்கத்துடன் இணைந்துள்ளார்கள். அவர்களுடன் ரவுப் கக்கிம், மனோகணேசன், ராதாகிருஸ்ணன், நான் உட்பட பலரும் ஒன்றாக இணைந்து நிற்கின்றோம்.
வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட அனைவரும் இணைந்து சஜித்தை வெல்ல வைப்பது உறுதியாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு அகதியாக இங்குள்ள மக்கள் வவுனியாவிற்கு வந்தபோது, நான் உதவினேன். தேவைகளை சந்தித்தேன். இந்த பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றி உதவி செய்தேன்.
அனுர வெற்றி பெற்றார் நாடு சூனியமாகிடும். ரணில், அரியநேந்திரன் ஆகியோரால் வெல்ல முடியாது. அது சஜித்தை வெல்ல வைப்பதற்கான தடுக்கும் செயல்.அதற்கு இங்குள்ள மக்கள் இடமளிக்கக்கூடாது.
மகிந்த, ரணில் உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்கள். ஆனால் அவர்களது எதிர்க்கட்சி பதவிக்காலத்தில் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், சஜித் பிரேமதாஸ தனது எதிர்க்கட்சி பதவியிலிருந்த போதிலும், பல்வேறு பணிகளை முன்னெடுத்தார்.
இங்கு சிலர் பார் போமிட்டுக்களை பெற்று கோடிக்கு விற்கின்றார்கள். அவ்வாறு பார் அனுமதி பெற்றவர்கள் சஜித்தை வெல்லவிடக்கூடாது என்று சதி செய்கின்றார்கள். சஜித் வென்றால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார்.
-கிளிநொச்சி நிருபர் சப்தன்-
0 Comments