தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை வெற்றியாளராக அறிவிக்கும் இறுதி அறிவிப்பு சரியான நேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டால் இன்று பிற்பகல் அவர் புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ய முடியும் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பதவிப் பிரமாண நேரத்தை உறுதிப்படுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
இறுதி அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியிடப்பட்டால், இன்று பதவியேற்பு நடக்கலாம் என்றும் கூறினார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டவுள்ள NPP ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.
இன, மத வெறியின்றி சாதித்த அபார வெற்றிக்கு வாழ்த்துகள் அனுர குமார திசாநாயக்க. சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆலோசனையின் பேரில் மற்றவர்களை நிராகரித்து தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டிய தமிழ் மக்களுக்கு எங்கள் நன்றிகள். என்றும் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவுக்காக நாங்கள் கடுமையாக பிரச்சாரம் செய்தோம் ஆனால் அது நடக்கவில்லை. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுராதிசநாயக்க பதவியேற்பார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஜனநாயகம் மற்றும் நல்லெண்ணத்தின் உணர்வில் நான் எனது நண்பரை அழைப்பதுடன், கடினமான பாதையில் சிறந்து விளங்க வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார்.
0 Comments