பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் ,இலங்கையின் புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (23) பதவியேற்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று காலை பதிவிப்பிரமாணம் செய்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு

இந்நிலையில் , நாடாளுமன்றம் இன்று (23) கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும், மேலும் , நான்கு பேர் கொண்ட அமைச்சரவையும் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வரும் நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.