கண்டி - கொழும்பு பிரதான வீதியில் நெலும்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தேரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (27) காலை இடம்பெற்றுள்ளது.




வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி பின்னர் இரண்டு கடைகள் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.


வேனின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, வேனில் பயணித்த தேரர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.