வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் சஜித் பிரேமதாஸவுக்குத்தான் பெருவாரியான ஆதரவு உள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் முதல் சுற்றிலேயே 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று விடுவார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு இல்லை. ரணிலாலும்முன்னோக்கிச் செல்ல முடியாது.

அனைத்து இன மக்களின் ஆதரவும் சஜித்துக்குத்தான் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் 23 அல்லது 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்.


இடைக்கால அரசொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.