கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 900 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.


போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்த்துகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் தற்போது வரை கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.


மேலும், இவருக்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 838 கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.