சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் Dhananjaya de Silva அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும், Kamindu Mendis மற்றும் Pathum Nissanka ஆகியோர் தலா 64 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Josh Hull மற்றும் Olly Stone ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 325 ஓட்டங்களை பெற்றுள்ளது.
0 Comments