இண்டர் போல் சிகப்பு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ள தற்போது சிங்கப்பூரில் இருக்கும் மத்திய வங்கிக் கொள்ளையின் பிரதான சந்தேக நபர் அர்ஜுன மஹேந்திரனை தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்குக் கொண்டுவருவதாகவும், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி அவரிடம் வாக்குமூம் பெற்று ரனில் விக்ரமசிங்கவையும் தனது அரசாங்கத்தின் கீழ் கைது செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


கிரிபத்கொட நகரில் இன்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்ட பொதுக்கூட்டம் இன்று பிற்பகல் கிரிபத்கொடவில் இடம்பெற்றது.இதன் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.