மாணவர்கள் சிலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலை அதிபர் எதிர்வரும் செப்டெம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திஸ்ஸமஹாராம நீதிமன்றில் இன்று (29) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சம்பவத்திற்கு முகங்கொடுத்த மாணவர்கள் மற்றும் அதற்கு ஆதரவளித்தவர்கள் தொடர்பில் தனித்தனியாக விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி கதிர்காமம் கோதமீகம பாடசாலையில் இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, கோத்தமீகம பகுதியைச் சேர்ந்த மேற்படி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று காலை 9 மணி முதல் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments