மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கலேன்பிந்துனுவெவ தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் உல்பத்கம பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் குழாயில் இருந்து குளித்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த தண்ணீர் மோட்டாரின் வயர் அவிழ்ந்து மாணவனின் உடலில் பட்டதில் மின்சாரம் தாக்கி குறித்த மாணவன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.