மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிக்கு இணங்க நாமலை வேட்பாளராக அவர் களமிறக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்;
“.. எங்களை அனுப்பியது மஹிந்த ராஜபக்ஷ, அவர்தான் கூறினார் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறினார். அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் இணைந்து தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறினார்கள்.
நாமலுக்கு இது சரியான நேரமல்ல என மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக தெரிவித்தார். என்றாலும் நாமல் எம்பியின் கடும் கோரிக்கை காரணமாக அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிப்படி நாமலை வேட்பாளராக அவர் களமிறக்கவில்லை. இன்றும் மஹிந்த ராஜபக்ஷ அவரது மனசாட்சிக்கு உட்பட்டு ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்றே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்..”
0 Comments