‘கருத்துக் கணிப்புக்களால் தவறாக வழிநடத்தப்படக்கூடாது’ என்ற தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக தீவிரமாக கரிசனை செலுத்தப்பட வேண்டும்.
தேர்தல் ஆணைக்குழு கடந்த வெள்ளியன்று விடுத்த எச்சரிக்கையில், சக்தி வாய்ந்த வெளி நிறுவனங்கள் மூலம் செல்வாக்கற்ற பல்வேறு அமைப்புக்களால் நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புக்கள் மூலம் இலங்கை வாக்காளர்கள், ‘பாதிப்புக்குள்ளாகவோ அல்லது தவறாக வழிநடத்தப்படவோ கூடாது’ என வலியுறுத்தியுள்ளது.
செப்டம்பர் 21 ஆம் திகதி உண்மையான இலங்கையர்களின் முடிவை உறுதிசெய்வதற்காக அனைத்து இலங்கை மக்களும் இதனை மிகக் கரிசனையோடு கருத்திற்கொள்ள வேண்டும்.
உண்மையில் உள்நாட்டு தேர்தல் சட்டங்கள், நாட்டின் பொருளாதார நலன்கள் மற்றும் தேசிய நலன்களை நிலைநிறுத்துவதாக வெளிநாட்டு சமூக ஊடக நிறுவனங்கள், உறுதியளித்தாலும் கூட பல ஆசிய நாடுகளின் தேர்தல் பெறுபேறுகளில் தேவையற்ற விதத்தில் செல்வாக்கு செலுத்தியுள்ளதோடு இந்த நாடுகளில் சக்திமிக்கவையாகவும் காணப்படுகின்றன.
சர்வதேச சமூக ஊடகங்கள் பெரும் செல்வாக்குடனான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறித்த ஊடகங்கள் அவர்களின் உள்ளூர் முகவர்களுடன் இணைந்து தமது சொந்த நலனுக்காக, நாட்டின் தேசிய நலன்களுடன் அடிக்கடி முரண்படும் வெளியார் நலன்களை ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு சார்பாக, மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கருத்துக்கணிப்பு அறிக்கைகளின் அடிப்படையில் புத்திசாலித்தனமாக மக்களின் எண்ணங்களையும் உண்மையான வாக்களிப்பு முறைகளையும் மாற்ற முடியும்.
திட்டமிட்ட கருத்துக் கணிப்பினை மேற்கொள்பவர்கள் தமக்கு விருப்பமான வேட்பாளரை வெற்றிபெறுபவராக ஏமாற்றும் வகையில் காண்பிப்பது எளிதானதொரு கருவியாகக் கூறப்படுகின்றது. வெளிநாட்டு ஊடகத் நிறுவனங்களால் தொடர்ச்சியாக இக் கருத்துக் கணிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை மிகவும் பொருத்தமானதும் சரியானதுமாகும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அமெரிக்காவின் நிதியுதவியினைப் பெறுகின்ற உள்ளூர் அமைப்பொன்று ஞாயிறு செய்தித்தாளில் ஒன்றில், நன்கு அறியப்பட்ட வேட்பாளரின் வெற்றியைக் காட்டும் வகையிலான கருத்துக் கணிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பல நீதிமன்ற வழக்குகளை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் இருந்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும், அதே நேரத்தில் இந்த வேட்பாளர் பல தடவைகள் நீதித்துறையுடன் மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் முரண்படுவதற்கு முயற்சித்து வருகிறார்.
இதனிடையே, தென்னாபிரிக்காவில் பிறந்த கனேடிய மற்றும் அமெரிக்க பிரஜையான கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் ‘எக்ஸ்’ தளம், முன்னர் ‘ட்விட்டர்’ என அழைக்கப்பட்ட சமூக வலைத்தளமாகும். அதனால் எக்ஸ் தளமும் ஸ்டார்லிங்க்கும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்களாலும் தேர்தல் ஆணைக்குழுவினாலும் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும்.
2022 ஒக்டோபரில் 44 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ‘எக்ஸ்’ தளத்தினை கொள்வனவு செய்ததில் இருந்து, தனிப்பட்ட நபர் என்ற வகையில் அவருக்கென கருத்துச் சுதந்திரம் இருந்தாலும் கூட மஸ்க் தனது சொந்த தளத்தைப் பயன்படுத்தி கேள்விக்குட்படுத்தக்கூடிய பல கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கியுமுள்ளார்.
ஜூலை 12 இல் பிரஸ்ஸல்ஸில் இருந்து ரொயிடர்ஸ் வெளியிட்ட, செய்தியில் எலோன் மாஸ்கின் சமூக ஊடக நிறுவனமான எக்ஸ் தளம், ஐரோப்பிய ஒன்றிய நிகழ்நிலை உள்ளடக்க விதிகளை மீறியுள்ளதோடு அதன் நீல சரிபார்ப்பு குறி பயனர்களை ஏமாற்றுகிறது, அது செயல்படும் விதம் மிகப்பெரிய அபராதம் மற்றும் குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுக்களுக்கும் வழிவகுக்கும் என ஐரோப்பிய யூனியன் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தனர். ஐரோப்பிய ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகள், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் (DSA) கீழ் முதலில் வெளியிடப்பட்டது. ஏழு மாத கால நீண்ட விசாரணையைத் தொடர்ந்து. சட்டவிரோத உள்ளடக்கம் மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கான அபாயங்களைத் தவிர்ப்பதற்கான புதிய விதிகளுக்கு மிகப் பெரிய நிகழ்நிலைத் தளங்கள் மற்றும் தேடுபொறிகள் அவசியமாகும்.
ஓகஸ்ட் 12 ஆம் திகதிய TECH & CNBC அறிக்கையில், ‘வெறுப்புப் பேச்சுகளை ‘எக்ஸ்’ தளம் தவிர்க்க வேண்டும்’ என ட்ரம்ப்பின் நேர்காணலுக்கு முன்னதாக எலோன் மஸ்கை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தது. குறித்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளரை மேற்கோள் காட்டி ‘இங்கிலாந்தில் நடந்த அண்மைய கலவரங்கள், ஒரு பாரிய கத்திக்குத்து தாக்குதல் தொடர்பான தவறான தகவல்களால் தூண்டப்பட்டது, இதனிடையே, மஸ்கின் டொனால்ட் டிரம்புடனான உரையாடலும் இடம்பெற இருக்கின்றது.
நிறுவனம் அதன் சமூக ஊடக தளத்தில் வன்முறை மற்றும் வெறுப்பூட்டும் பேச்சு உள்ளிட்ட சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பரப்புவது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றால் ஐரோப்பாவில் அபராதம் மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐரோப்பிய ஆணைக்குழு எலோன் மஸ்க் மற்றும் அதன் தலைமை நிருவாக அதிகாரி ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ‘தேர்தல் சூழலில் விவாதங்கள் மற்றும் நேர்காணல்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள முக்கிய அரசியல் அல்லது சமூக நிகழ்வுகளுடன் இணைந்ததாக வன்முறை, வெறுப்பு மற்றும் இனவெறியைத் தூண்டும் உள்ளடக்கத்தை பரப்புவது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தில் நாங்கள் கண்காணித்து வருகிறோம்’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அண்மைய வாரங்களில் இங்கிலாந்தில் நடந்த கலவரங்கள் எக்ஸ் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பரவிய தவறான தகவல்களால் தூண்டப்பட்டு, தாக்குதல் நடத்தியதாக தவறாக ஒருவரை அடையாளம் காட்டப்பட்டது…’ என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அப்போதிருந்தே, மஸ்க் எக்ஸ் தளத்தில் ஐக்கிய இராச்சியத்தின் இந்நிலைமை தொடர்பில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டார். பிரித்தானிய தெருக்களில் நடைபெறும் வன்முறை ஒரு உள்நாட்டுப் போரில் முடிவடையும் என அவர் குறிப்பிட்டார், ‘உள்நாட்டுப் போர் தவிர்க்க முடியாதது’ என எழுதினார். நிச்சயமாக அது உள்நாட்டுப் போர் அல்ல!
‘தி டெலிகிராப்’ நாளிதழ்களின் இணையதளத்தில் இருந்து வந்ததைப் போல தோற்றமளிக்கும் ஒரு போலியான பிரதான தலைப்புச் செய்திப் படத்தையும் மஸ்க் பகிர்ந்துள்ளார், கலகக்காரர்களுக்காக போல்க் தீவில் ‘தடுப்பு முகாம்களை’ இங்கிலாந்து கட்டுவதாக பொய்யாகக் கூறினார்.’ இங்கிலாந்தில் ஓகஸ்ட் மாத கலவரங்கள் பெரும்பாலும் இங்கிலாந்தின் பல பகுதிகளில் தீவிர வலதுசாரி தீவிரவாத வெள்ளையர்களால் ஆசிய நாட்டவர்கள் மற்றும் ஆபிரிக்கர்கள் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும். தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்ய பிரித்தானிய அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுத்தது மற்றும் அவர்களில் பெரும்பாலோர் மீது வழக்கும் தொடர்ந்தது.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மஸ்க் சந்தித்த போது இலங்கையில் ஊடகத்தளம் ஒன்றை அமைக்குமாறு அக் கோடீஸ்வரருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இலங்கையில் நாடு முழுவதும் செயற்கைக்கோள் புரோட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக ஓகஸ்ட் 13ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது. ஸ்டார்லிங்க் என்பது எக்ஸ் இன் துணை நிறுவனமாகும்.- Vidivelli
0 Comments