சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குளவி தாக்குதல் அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் சீகிரிய சிங்க பாதத்திற்கு அருகில் குளவி கொட்டியதில் சுற்றுலா பயணிகள் உட்பட 70 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று சீகிரியாவை காண பெருமளவான மக்கள் வருகை தந்திருந்த நிலையில், சிங்க பாதத்திற்கு அருகில் குளவி கூடு களைந்து இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
0 Comments