மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை – கதிர்காமம் வீதியில் மாலியத்த பிரதேசத்தில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திக்வெல்லவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சென்றுகொண்டிருந்த மாடு ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments