போதைப்பொருள் விற்பனை செய்யும் வீடொன்றில் வைத்து மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இன்று (29) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்தனர்.

மத்துகம பொலிஸில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் போதைப்பொருள் விற்பனை செய்யும் வீடொன்றில் தங்கியிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலையடுத்து வெலிப்பன்ன பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட இரவு நடமாடும் ரோந்து உத்தியோகத்தர்களால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதற்காக அங்கு தங்கியிருந்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்