பிரபல சமூக செய்தி பரிமாற்ற செயலியாக இருக்கும் டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச் செயல்கள் செயலியின் ஊடாக நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாக பதிவான வழக்கில் பாவெல் துரோவ், பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.