எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் ஒழுங்கு முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும், வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்பு தெரிவையும் மற்றும் மூன்றாவது விருப்பு தெரிவையும் வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதோடு, அவசியமெனில் வாக்கை மாத்திரம் அடையாளமிடுவதற்கும் சாத்தியம் காணப்படுகின்றது.