புர்கினா பாசோவில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புர்கினா பாசோவின் தலைநகருக்கு அருகில் உள்ள கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு ராணுவ ஆட்சிக்குழு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களின் சாட்சியத்தின்படி, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.


ராணுவத்தின் உத்தரவின் பேரில் பாதுகாப்பான நிலத்தடி அகழிகளை தோண்டிக் கொண்டிருந்த ஒரு குழுவினரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு அல்கொய்தா துணை அமைப்பு பொறுப்பேற்றுள்ளதுடன், பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை மறுத்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த கொடிய தீவிரவத தாக்குதலில் பொதுமக்களும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.