கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (24) சுன்னாகம், நொச்சியாகம மற்றும் ஹபரணை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் தாயுடன் பயணித்த சிறுவன் காயமடைந்து தெலிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பசத்தில் புத்தளம், தங்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 2 வயதும் 6 மாதமும் நிறம்பிய சிறுவனெ உயிரிழந்துள்ளான்.
மேலும் நொச்சியாகம - குக்குல்கடுவ வீதியின் நெலுகொல்லேவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
அம்பகஹவெவ, நொச்சியாம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பொலன்னறுவை - ஹபரணை வீதியின் மொரகஸ்வெவ பிரதேசத்தில் வாகனம் ஒருவரை மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும் வாகனத்தையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments