எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பதற்காக 736,589 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.