இந்த வருடத்தின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வரிக்குப் பின்னரான நிகர இலாபத்தை இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் கூற்றுப்படி 2024 ஏப்ரல்-ஜூன் நிகர லாபம் ரூ. 34.53 பில்லியன் ஆகும்
முன்னதாக 2024 ஜனவரி – மார்ச் காலாண்டில் இலாபம் 84.67 பில்லியன் ஆகும்
இதன்படி 2024 முதல் பாதியில் மின்சார சபை 119.20 பில்லியன் ரூபா இலாபத்தை அடைந்துள்ளது.
2023 ஏப்ரல்-ஜூன் நிகர இலாபம் 20.65 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில்
2024 ஏப்ரல்- ஜூன் நிகர இலாபம் 34.53 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இது 67.2% அதிகரித்த இலாபம் ஆகும்.
மக்களின் மேல் 150 வீதம் சுமைகளை சுமத்தி அதிக மின் பட்டியல் மூலம் ஏற்பட்ட இலாபமானது மக்களின் கஷ்டங்களினால் ஏற்பட்ட இழப்புக்கள் இதனால் இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் இந்த மின் அதிகரிப்பினால் பாதிக்கப்படுள்ளனர் இதனால் அனைத்து மின்சாரத்தில் இயங்கும் தொழில்சாலைகளின் விலை உயர்வினால் நடுத்தர மக்கள் நடுத்தெருவில் இருக்கும் இதற்கான மாணியங்கள் இதற்கான மின் குறைப்புக்கள் எதிலையும் நாட்டகாட்டாத இந்த அரசை மக்கள் விசனம் கொண்டுள்ளார்கள்
0 Comments